Diploma in Screen Printing (D.S.P.) -- [ஸ்கிரீன் பிரிண்டிங் பயிற்சி்]

ஸ்கிரீன் பிரிண்டிங் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். ஓவியத் துறையின் சகோதரக் கலையாகத் திகழும் இந்தத் திரை அச்சுக்கலை (Silk Screen Printing) உங்கள் வாழ்வில் ஒளியேற்றும் என்பது நிச்சயம். பெரிய எந்திர சாதனங்கள் எதுவும் இல்லாமல் மிகக் குறைந்த செலவில் அச்சிடும் முறைதான் இந்தக் கலையாகும். இந்தக் கலையைக் கற்றால், குறைந்த முதலீட்டில் ( ரூ.1000/ போதும் ) சொந்தத் தொழில் தொடங்கலாம். நிறைய வருவாய் பெறலாம். ஓவியம் வரையும் திறமை இதற்குத் தேவையில்லை. உங்கள் குழந்தைகளக் கூட உங்களுக்குத் துணையாக இதில் ஈடுபடச் செய்யலாம். ஸ்கிரீன் பிரிண்டிங்கினால் காகிதத்தில் மட்டுமின்றி தோல், தகரம், பிளாஸ்டிக், துணிகள், மரம் இவைகள் மீதும் அச்சிடலாம். இதுவே இதன் சிறப்பு. நீங்கள் வேலை செய்பவராக இருந்தாலும், இல்லதரசியாக இருந்தாலும், ஓய்வு நேரத்தைப் பயன்படுத்தியும், முழுநேரச் தொழிலாகவும், பணம் சம்பாதிக்க இந்தக் கலை ஒரு வரப்பிரசாதமாகும்.

இந்தப் பயிற்சியில் ஸ்கிரீன் பிரிண்டிங் கின் அடிப்படைகள விளக்கி, விளம்பரத் துணிப்பைகள் அச்சிடுதல், பனியன்களில் அச்சிடுதல், பேட்ஜ்கள் தயாரித்தல், டின்ஷீட் என்னும் தகடு விளம்பரங்கள் செய்தல், விசிட்டிங் கார்டுகள், லெட்டர் பேடுகள் அச்சிடுதல், ஸ்டிக்கர்ஸ் தயாரித்தல், திருமண பத்திரிகைகள், வாழ்த்து அட்டைகள் தயாரித்தல், புத்தகங்களின் மேலட்டை அச்சிடுதல், போஸ்டர்கள் அச்சிடுதல், கொடிகள் அச்சிடுதல், பேனர்கள் அச்சிடுதல் போன்ற ஏராளமான தனித்தனிப் பாடங்கள் உள்ளன. அதிகமான படங்களாடு விளக்கம் தரப்பட்டுள்ளது. தொழில் தொடங்குதல், ஆர்டர்கள் பெறுதல், விலை நிர்ணயம் செய்தல், வேலையை முடிப்பதற் கான பட்ஜெட் போடுதல், வாடிக்கையாளர் சந்திப்பு போன்ற வியாபார உத்திகளும் விளக்கப் பட்டு... நீங்கள் சொந்தத் தொழில் தொடங்க வழிகாட்டப்படும். முதலீடு அதிகம் தேவையில்லை. இதுவும் அஞ்சல் வழிப் பயிற்சியே இதற்கான பயிற்சிக் காலம் இரண்டு மாதங்கள்.

பயிற்சிக் கட்டணம்

ரூ. 650/. மொத்தமாக செலுத்தினால் ரூ. 500/ போதும். இரண்டு தவணைகளில் ரூ. 350/ + ரூ. 300/ எனவும் செலுத்தலாம். தபால் மூலம் பயில்வோருக்கு ஒருநாள் சிறப்பு நேர்முக வகுப்பு உண்டு. இதற்குத் தனிக் கட்டணம். இது பற்றிய விவரம் பாடத்தோடு அனுப்பப்படும். பயிற்சியின் முடிவில் Diploma in Scren Printing என்ற அழகிய சான்றிதழ் வழங்கப்படும்.

ஸ்கிரீன் பிரிண்டிங் நேர்முகப் பயிற்சி

ஸ்கிரீன் பிரிண்டிங்கில் நேர்முகப் பயிற்சியும் உண்டு. பயிற்சிக் காலம் முன்று நாட்கள் மட்டுமே. நான்காவது நாள் நீங்கள் ஒரு முழு ஸ்கிரீன் பிரிண்டராக தொழில் தொடங்கும் வகையில் தயாராகி இருப்பீர்கள். இதில் எந்த மந்திரமும் இல்லை. நாங்கள ஸ்கிரீன் பிரிண்டிங் தொழிலகமும் வைத்திருப்பதால், எங்களது பல்லாண்டு கால அனுபவங்கள், நம்மிடம் பயிற்சி பெற்ற மாணவர்களுக்கு ஏற்பட்ட சந்தேகங்கள், இவைகள எல்லாம் ஒன்று திரட்டி, செயல் ரீதியாக நேரடி வகுப்புகள் நடைபெறுகின்றன. இப்பயிற்சிக்குப் பின் நிச்சயமாக நீங்கள் ஒரு சிறந்த தொழில் முறை ஸ்கிரீன் பிரிண்டராக விளங்க முடியும். இந்த நேர்முகப் பயிற்சிக்கான கட்டணம் ரூ. 650/ ஆகும். இதை பயிற்சித் தொடங்கும் முதல் நாளன்றே செலுத்திவிட வேண்டும். இது தவிர பயிற்சிக்கான பொருள்களுக்காக ரூ.700/ முதல் நாளன்றே செலுத்த வேண்டும். பயிற்சியின் முடிவில் இந்தப் பொருட்கள நீங்கள் எடுத்துச் செல்லலாம். இந்தப் பொருட்கள் நீங்கள் தொழில் தொடங்குவதற்கான ஆரம்ப முதலீடாக அமையும்.

உணவு, தங்குமிடம்

இந்த நேர்முக வகுப்பில் கலந்து கொள்வோர் சென்னையில் தங்கவேண்டும். உணவு, தங்குமிடம் அவரவர் சொந்த பொறுப்பாகும். பயிற்சியாளர்களின் நலன் கருதி அஜந்தாவிலேயே எளிய முறையில் தங்குமிடம் ஏற்பாடு செய்யப்படும். இதற்கு கட்டணம் எதுவும் இல்லை. வகுப்புகளில் குறிப்பிட்ட நேரத்தில் கலந்துகொள்வது நல்லது. நேர்முகப் பயிற்சியில் சேர விழைவோர் பதிவுக் கட்டணாக ரூ.150/ செலுத்தி தங்கள் பெயரைப் பதிவு செய்துகொள்ளவேண்டும். பயிற்சிக் கட்டணத்தில் இத்தொகை கழித்துக் கொள்ளப்படும். பதிவு செய்து கொண்டவர்கள் மட்டும் வரிசைப்படி நேர்முகப் பயிற்சிக்கு அழைக்கப்படுவர். அப்போது தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். அப்போது கலந்து கொள்ள தவறினால் மீண்டும் உங்கள் முறை வரும் வரை காத்திருக்க வேண்டும்.

ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் ஆண்களுக்கும், மூன்றாவது சனி, ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பெண்களுக்கும் நேர்முக வகுப்புகள் நடக்கும். எனவே காலதாமதம் செய்யாமல் உடனே பெயரை பதிவு செய்து கொள்வது நல்லது. பெண்களுக்கு தனி வகுப்புகள் உண்டு. பயிற்சி முடிந்ததும் டிப்ளமோ சான்றிதழ் வழங்கப்படும்.

 

 

 

More Details